marriage
marriagefile image

அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம்.. தடபுடலாக தட்டு வரிசை.. கிராம மக்களின் விநோத வழிபாடு!

சீர்வரிசையோடு அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் கோலகலமாக திருமணம் செய்துவைத்த விநோத நிகழ்வு புதுக்கோட்டையில் அரங்கேறியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மேல்மங்கலம் தெற்கு கிராமத்தில் சித்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் அருகே வேப்ப மரம் ஒன்றும் அரச மரம் ஒன்றும் தானாக முளைத்து வளர்ந்துள்ளன.

இதனைப் பார்த்த கிராம மக்கள், அரச மரத்தை சிவன் எனவும் வேப்ப மரத்தை பார்வதி எனவும் கருதி அந்த இரு மரங்களுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அதன் அடிப்படையில் இன்று காலை சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க இரு மரத்திற்கும் திருக்கல்யாணம் செய்து வைத்தனர். இதற்காக ஆயிரக்கணக்கான பெண்கள் பட்டு சேலை, பட்டு வேட்டி, பழங்கள் இனிப்பு வகைகள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை சீர்வரிசையாக கொண்டு வந்தது காண்போரை கவர்ந்தது.

இப்படி திருமணம் செய்து வைப்பதால் நல்ல மழை பெய்யும், ஊர் செழிக்கும், கேட்ட வரம் கிடைக்கும் என்று நம்புவதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com