மழை வேண்டி நடத்தப்பட்ட விநோதத் திருமணம்!

மழை வேண்டி நடத்தப்பட்ட விநோதத் திருமணம்!

மழை வேண்டி நடத்தப்பட்ட விநோதத் திருமணம்!
Published on

புதுக்கோட்டையில் மழை பெய்ய வேண்டி ஆல மரத்திற்கும், அரச மரத்திற்கும் திருமணம் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் பொன்னன் விடுதி கிராமம் உள்ளது. இங்கு நீண்ட காலமாக மழை பெய்யாததால் வறட்சி நிலவுகிறது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இயற்கை வலங்களை பாதுகாக்க வேண்டும், வறண்ட பூமியில் மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் போன்ற வேண்டுதல்கள் நிறைவேற ஆல மரத்திற்கும், அரச மரத்திற்கு கிராம மக்கள் திருமணம் செய்து வைத்தனர்.

இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடப்பதுபோல் அனைத்து நடைமுறைகளையும் இந்த திருமணத்தில் பின்பற்றப்பட்டது. திருமணம் முடிந்த பின்னர் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com