கடல் சீற்றம்: தொழில் முடக்கத்தால் மீனவர்கள் வேதனை
கடல் சீற்றம் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் 7ஆவது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடல் சீற்றத்துடன் பலத்தக் காற்று வீசி வருகிறது. இதன்காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடல் சீற்றம் காரணமாக 7வது நாளாக மீன்பிடிக்கச் கடலுக்குசெல்லவில்லை. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள், பைபர் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
சீர்காழி அருகே மழையின் காரணமாக பழையாறு, பூம்புகார், தரங்கம்பாடி உட்பட 26 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் 7வது நாளாக மீன்பிடிக்கச் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் 6000 பைபர் படகுகள் 750 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.கடந்த ஒருவாரமாக மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலைதெரிவிக்கின்றனர்.