மெரினா, பெசண்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைப் பகுதிகளில் எண்ணெய்ப் படலம் முழுவதும் அகற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நீலாங்கரை கடற்கரையில் எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணி இன்று நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் குப்பம் பகுதியில் 1,200 பேர் எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், ஆர்கே நகர் - சென்னை துறைமுகம் இடையே 147 பேர் முழுவீச்சில் பணியில் ஈடுபட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 30 டன் கழிவும், 11 டன் எண்ணெய் கலந்த மண்ணும் அகற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.