அன்னையர் தினத்தையொட்டி தாய்மையை போற்றும் வகையில் மாரத்தான் போட்டி சென்னையில் நடைபெற்றது.
நாடு முழுவதும் உலக தாய்மார்கள் தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னையர் தினத்தையொட்டி சென்னை அண்ணாநகரில் உள்ள பூங்காவில் தாய்மையை போற்றும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. பிரதான வீதிகள் வழியே நடைபெற்ற மாரத்தான் போட்டி, 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு 3 கிலோ மீட்டர், அதற்கு மேல் உள்ளவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 5 கிலோ மீட்டர், 7 கிலோ மீட்டர் என மொத்தம் 3 பிரிவுகளில் நடைபெற்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன. மேலும் போட்டியாளர்களுக்கும் தன்னார்வு அமைப்பினருக்கும் மன அழுத்தத்தை குறைத்திடும் வகையில் ஜும்பா நடன பயிற்சியும் வழங்கப்பட்டது. 700 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.