தமிழ்நாடு
பட்டுக்கோட்டையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டி
பட்டுக்கோட்டையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டி
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன.
வரும் நவம்பர் 29 ஆம் தேதியன்று தஞ்சையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அரசு சார்பில் நடைபெற உள்ளது. அதற்காக 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் போட்டியை வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியலிங்கம், பரசுராமன், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு தினத்தன்று பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.