\
இயற்கை வளங்களை பாதுகாக்க மாரத்தான் போட்டி

இயற்கை வளங்களை பாதுகாக்க மாரத்தான் போட்டி

இயற்கை வளங்களை பாதுகாக்க மாரத்தான் போட்டி
Published on

குமரி மாவட்டத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், நீர் நிலைகளைப் பராமரிக்கவும் வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது.   

குமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் ’பிரண்ட்ஸ் ஆப் நேச்சர்’ என்ற அமைப்பின் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இயற்கை வளங்களை பாதுகாக்கவும், நீர் நிலைகளைப் பராமரிக்கவும் வலியுறுத்தி நடைபெற்ற இந்த போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் ஆர்வமாக பங்கேற்றனர். இந்த மாரத்தான் போட்டியை பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ்‌ தொடங்கி வைத்தார். 
குலசேகரத்தில்‌ தொடங்கி ஆத்தூரில் உள்‌ள தனியார் பள்ளி வரை மாரத்தான் போட்டியின் தூரம் கணக்கிடப்பட்டிருந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு எம்எல்ஏ மனோ தங்கராஜ் பரிசு வழங்கினார்.இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த போட்டியில் நீர் நிலைகள் மற்றும் இயற்கை வளங்கள் குறித்து கருத்தரங்கமும் நடைபெற்றது. 

    ‌

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com