தமிழ்நாடு
மாறன் சகோதரர்களுக்கு குற்றப்பத்திரிக்கை: சிபிஐ கோர்ட் வழங்கியது
மாறன் சகோதரர்களுக்கு குற்றப்பத்திரிக்கை: சிபிஐ கோர்ட் வழங்கியது
பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், மாறன் சகோதரர்களுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை வழங்கியது.
தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக சன் டிவிக்கு வழங்கியதாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முறைகேடாக தொலைபேசி இணைப்பு வழங்கிய வழக்கில் இன்று மாறன் சகோதரர்கள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உட்பட 7 பேர் இன்று ஆஜராயினர். அவர்களுக்கு இன்று குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.