“பனை ஓலையில் மாஸ்க்” - கிராமப்புற தம்பதியினர் அசத்தல்..!

“பனை ஓலையில் மாஸ்க்” - கிராமப்புற தம்பதியினர் அசத்தல்..!

“பனை ஓலையில் மாஸ்க்” - கிராமப்புற தம்பதியினர் அசத்தல்..!

தூத்துக்குடியில் பனையேறும் தொழில் செய்யும் தம்பதியினர் பனை ஓலையில் மாஸ்க் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தனித்து இருத்தல், கைகளை நன்றாக கழுவுதல், முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்கியுள்ளனர். தேவை அதிகரிப்பின் காரணமாக முகக்கவசத்தின் விலை உயர்ந்து விட்டது. தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள குளத்தூரில் பனையேறும் தொழில் செய்யும் குணசேகரன், முருகலட்சுமி தம்பதியினர் பனை ஓலையையே முகக்கவசமாக மாற்றி அணிந்து அசத்தி வருகின்றனர். பனைத் தொழில் என்பது ஒரு ஆண்டில் 4 முதல் 6 மாதங்கள் வரை தான் இருக்கும். இப்படியிருக்க தற்போது ஊரடங்கால் சுத்தமாக தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை எதிர்கொள்ளத்தான் குணசேகரன் - முருகலட்சுமி தம்பியினர் பனை ஓலையில் முகக்கவசம் தயாரித்து, அதை அணிந்து தொழிலில் ஈடுபட்டனர்.
இதனைப் பார்த்த கிராம மக்கள் ஆர்வமுடன் பனை ஓலை முகக்கவசங்களை அவர்களிடம் இருந்து வாங்கி செல்கின்றனர். மக்களிடம் கிடைத்த வரவேற்பை பார்த்து அந்த தம்பதியினர் குடும்பத்தினருடன் இணைந்து பனை ஓலை முகக்கவசம் தயாரித்து வருகின்றனர்.

துணியினால் செய்யப்படும் முகக்கவசத்தை விட, இயற்கையான பனை ஓலை முகக்கவசம் மிகவும் பாதுகாப்பாக உணர வைப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த பனை ஓலை முகக்கவசம் ஒன்று 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குறைந்த விலை என்பதால் மக்களும் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com