விழுப்புரத்தில் களைகட்டி வரும் திருநங்கைகளுக்கான கூவாகம் திருவிழா! நாளை தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்வு

விழுப்புரம் கூவாகம் திருவிழாவின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம்
கூவாகம் திருவிழா
கூவாகம் திருவிழாபுதியதலைமுறை

விழுப்புரத்தில் திருநங்கைகளுக்கான கூவாகம் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திருநங்கைகளுக்கான நடத்தப்பட்ட அழகி போட்டியில் வடசென்னையை சேர்ந்த ஷாம்ஸீ மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 9-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வாக திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நாளை (செவ்வாய்க்கிழமையும்) தேர் திருவிழா, தாலி அகற்றும் சடங்குகள் நாளை மறுநாள் (புதன்கிழமையும்) நடைபெறுகிறது.

கூவாகம் திருவிழா
15 மீ! உலகிலேயே நீளமான பாம்பின் படிவம் கண்டெடுப்பு? 47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘வாசுகி’!

இவ்விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்துகொள்கின்றனர்.

இவர்களை மகிழ்விக்கும் வகையில் விழுப்புரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் சென்னை திருநங்கை தலைவிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து கூவாகம் திருவிழா என்ற நிகழ்ச்சியை விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடத்தின.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் தொடக்கமாக திருநங்கைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அளித்து வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். தொடர்ந்து, முன்னேற்ற பாதையில் தமிழக திருநங்கைகள் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.

அதன் பின்னர் மிஸ் திருநங்கை-2024 தேர்வு, திருநங்கைகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், நடனப்போட்டிகள், கிராமிய கலைகளில் புகழ்பெற்ற திருநங்கையரின் தெருக்கூத்து, கனியன் கூத்து ஆட்டங்களும் நடைபெற்றன. அதனை தொடர்ந்து நடைபெற்ற மிஸ் திருநங்கைக்கான தேர்வு போட்டியில் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டு மேடையில் தோன்றி ஒய்யாரமாக வலம்வந்தனர்.

இவர்களில் நடை, உடை, பாவணை அடிப்படையில் 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் மிஸ் திருநங்கை-2024-க்கான பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதற்காக அவர்கள் 7 பேரிடமும் பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறந்த முறையில் பதில் அளித்த 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் மிஸ் திருநங்கையாக வடசென்னை ஷாம்ஸி தேர்வு செய்யப்பட்டார். 2-ம் இடத்தை புதுவை மாநில மருத்துவர் வர்ஷா , 3-ம் இடத்தை தூத்துக்குடி சுபப்பிரியா பெற்றனர். இதில் மிஸ் திருநங்கை பட்டத்தை வழங்கி பாராட்டினார்.

விழாவில் சினிமா நடிகைகள் அம்பிகா, தீபா, நடிகர்கள் ஸ்ரீகாந்த், உள்ளிட்டோர் மற்றும் ஏராளமான திருநங்கைகள் கலந்துக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com