தமிழ்நாடு பட்ஜெட்: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி

தமிழ்நாடு பட்ஜெட்: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி

தமிழ்நாடு பட்ஜெட்: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி
Published on

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் வெளியாகியுள்ள கிராமப்புற மேம்பாட்டுக்கு உதவும் திட்டங்கள்..

  • மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும்
  • சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5,500 கோடி சிறப்பு கோவிட் கடன் உட்பட ரூ.20ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும்
  • 36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ.809.71 கோடி செலவில் ஊரக வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்படும்.
  • கிராமப்புறங்களில் ரூ.400 கோடி செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்.
  • ஊரக வேலை உறுதித்திட்ட பணிநாட்களை 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.
  • ஊரக வேலை உறுதித்திட்ட ஊதியத்தை ரூ.300 ஆக உயர்த்த வலியுறுத்தப்படும்.
  • கிராமப்புற ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு; 2021-22ஆம் ஆண்டில் ரூ.8,017.41 கோடி செலவில் 2,89,877 வீடுகள் கட்டப்படும்.
  • அடுத்த 5 ஆண்டுகளில் 8,03,924 குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடு கிடைப்பது உறுதிசெய்யப்படும்.
  • 79,395 குக்கிராமங்களில் நாளொன்றுக்கு ஒருவருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்.
  • 27 கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்யப்படும்.
  • ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீட்டுக்குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு ரூ.2,000 கோடி செலவிடப்படும்.
  • இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் தமிழகத்தில் அமைக்கப்படும்.
  • மாநிலத்திலுள்ள ஈர நிலங்களின் சூழலியலை மேம்படுத்த 'தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம்' ஏற்படுத்தப்படும்.
  • ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.150 கோடி.
  • விரைவாகவும் பாதுகாப்பாகவும் செலவு குறைவாகவும் கட்டிடங்களை கட்ட நடவடிக்கை எடுக்கப்படுத் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com