ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் - பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி!

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் - பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி!

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் - பரிசல் ஓட்டிகள் மகிழ்ச்சி!
Published on

ஒகேனக்கல்லில் விடுமுறை தினத்தை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிந்ததால், பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட சிறு சிறு தொழிலாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் வந்து அருவிகளில் குளித்தும், பரிசல் பயணம் செய்வதும் வழக்கம். ஆனால் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால், ஒகேனக்கல் ஐந்தருவி வெறிச்சோடியது. மேலும் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் ஐந்தருவி நீரின்றி வெறும் பாதைகளாக காட்சியளித்து வந்தது. இந்த சூழலில் சில நாட்களுக்கு முன் தருமபுரி மாவட்டத்தில் மழை பெய்ததால் ஒகேனக்கல் காவேரி ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதனால் தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 

கோடை மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க சுற்றுலா பயணிகள் முதன்மை அருவி மற்றும் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். 

கோடை விடுமுறை முடிந்த பிறகு வெறிச்சோடி கிடந்த ஒகேனக்கல் முதன்மை அருவி இன்று குளிக்க இடமின்றி கூட்டமாக காணப்பட்டது. மேலும் பரிசல் பயணம் செல்லும் மணல் திட்டு, ஐந்தருவி, ஆற்றில் பரிசல் இறக்கும் இடத்தில் உள்ள கொட்டும் அருவி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட சிறு,சிறு தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து கடந்த சில நாட்களாக வெப்பம் காற்று வீசி வந்த சூழலில் இந்த கோடை மழையால் சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைந்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com