“ஊட்டி ஹோம் மேட் சாக்லெட்டிற்கு புவிசார் குறியீடு வழங்கணும்” - உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

“ஊட்டி ஹோம் மேட் சாக்லெட்டிற்கு புவிசார் குறியீடு வழங்கணும்” - உற்பத்தியாளர்கள் கோரிக்கை!
“ஊட்டி ஹோம் மேட் சாக்லெட்டிற்கு புவிசார் குறியீடு வழங்கணும்” - உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

சுற்றுலா நகரமான ஊட்டியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹோம் மேட் சாக்லெட்டிற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்றும், மலைப்பகுதியில் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் இந்த வகை சாக்லெட் தயாரிப்புக்கு வரும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் போதுமான பேருந்து வசதியில்லாததால் கிடைக்கும் வருமானத்தில் ஆட்டாே உள்ளிட்ட தனியார் வாகனங்களில் வர சிரமப்படுவதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஊட்டி வர்கி, யூக்கலிப்டஸ் தைலம் போன்றவை பிரசித்தி பெற்றவை. அதைப்போலவே நூறாண்டுகளுக்கு மேலாக ஊட்டியில் தயாரிக்கப்படும் ஹோம்மேட் சாக்லெட் உலக பிரசித்தி பெற்றது. இங்குவரும் சுற்றுலாப்பயணிகள் ஹோம் மேட் சாக்லெட்டை விரும்பி வாங்கி செல்வார்கள். தற்போது இந்த ஹோம்மேட் சாக்லெட்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஊட்டி ஹோம்மேட் சாக்லெட்டிற்கு புவிசார் குறியீடு வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, இந்த பாரம்பரிய ஹோம் மேட் சாக்லெட் தயாரிப்பை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளது. நீலகிரி போன்ற குளிர்ந்த பகுதிகளில் மட்டுமே தயாரிக்கப்படும் இந்த வகை ஹோம்மேட் சாக்லெட்கள் சீசன் அல்லாத காலத்தில் மாதம் ஒரு லட்சம் கிலோவும், சீசன் காலத்தில் 5 லட்சம் கிலோவரையும் விற்கப்படுவதாகவும் இதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கால்கிலோ பாக்ஸ் ரூபாய் 120 முதல் ரூபாய் 400 வரையும் வகைக்கு ஏற்றார்போல் விற்கப்படுகிறது. ஊட்டி ஹோம்மேட் சாக்லெட்களுக்கான டிமேண்டு இன்னும் குறையாமல் இருப்பதற்கு இதன் சுவையும், இதன் தரமுமே காரணமாக உள்ளது. நீலகிரியின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்காற்றும் ஹோம்மேட் சாக்லெட் உற்பத்தியை ஊக்குவிககும் வகையில் புவிசார் குறியீடு வழங்கவேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் மகளிருக்கான இலவச பஸ் இருந்தாலும் போதி பஸ் இல்லாததால் தங்களால் இலவச பேருந்து பயணத்தை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக இந்த தொழிலை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான பெண் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com