தேரோட்டம்
தேரோட்டம்pt desk

மன்னார்குடி | ராஜகோபால சுவாமி கோயில் தேரோட்டம் - மழையில் நனைந்தபடி வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி தேரோட்ட திருவிழாவில் கொட்டும் மழையில் நனைந்தபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Published on

செய்தியாளர்: C.விஜயகுமார்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் பங்குனி பெருவிழா கடந்த மாதம் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் ராஜகோபால சுவாமி பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சூரியபிரபை, தங்க கருட சேவை, வெண்ணைத்தாளி உற்சவங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், 17 வது நாளாக நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. ருக்மணி சத்தியபாமா உடன் ராஜகோபால சுவாமி தேரில் எழுந்தருளினார். மாலை 3 மணி அளவில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டம்
”கச்சத்தீவை இலங்கையிடமிருந்த மீட்பதற்காக விரைந்து நடவடிக்கை தேவை” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

கோயிலின் நான்கு வீதிகள் வழியாக தேர் வளம் வந்த போது மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து விழத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com