தங்க நாணயங்கள், பல லட்ச ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன்

தங்க நாணயங்கள், பல லட்ச ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன்
தங்க நாணயங்கள், பல லட்ச ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன்

திருச்சி மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் அம்பாளுக்கு தங்க நாணயங்கள், பல லட்ச ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அம்மன் அலங்காரத்தை கண்ட பக்தர்கள் பிரம்மிப்பில் மூழ்கினர்.


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ளது பகவதி அம்மன் திருக்கோயில், மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இத்தலத்தில் பெருந்திருவிழா கடந்த டிச.31-ம் தேதி (31.12.21) தொடங்கியது. இதில் முக்கிய திருவிழாவான 'தனலெஷ்மிக்கு அலங்காரம்' வெகு விமர்சையாக தற்போது நடைபெற்றுள்ளது. இதில் ரூ.10 தொடங்கி ரூ. 2000 வரை அனைத்து பணத்தையும் வைத்து உற்சவரை சுற்றி தோரணம் அமைக்கப்பட்டது. மேலும் தங்க நாணயங்களால் உற்சவருக்கு அலங்காரம் செய்து பக்தர்களை பிரமிக்கவும் வைத்திருந்தனர் கோயிலில் அலங்காரப்பணியை மேற்கொண்டோர்.

இப்படி பல லட்ச ரூபாய் நோட்டுகளினால் பகவதி அம்மன் நேர்த்தியோடு அழகாக அமைக்கப்பட்டு 'தனலெஷ்மி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இந்த தனலஷ்மி அலங்காரத்தில் அம்மன் தரிசிப்பதால் கடன் பிரச்சினை தீரும், செல்வ வளம் பெருகும் என்பதால் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி திருவிழா நடைபெற்றது.

- சார்லஸ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com