அரசு கொடுத்த பட்டா இருக்கு; ஆனா நிலம் இல்லை- தொழிலாளிகளுக்கு நடக்கும் அநீதி; மாஞ்சோலையின் மறுபக்கம்!

மாஞ்சோலை மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஏற்கனவே அரசினால் வழங்கப்பட்ட வீட்டு மனைகள் என்னவாயின?. இந்த கேள்விக்கான பதிலை தருகிறது புதிய தலைமுறையின் பிரத்யேக இந்த செய்தி தொகுப்பு.
மாஞ்சோலை மக்கள்
மாஞ்சோலை மக்கள்pt web

எங்கு செல்வார்கள் தொழிலாளர்கள்

மாஞ்சோலை என கேட்டதும், எழில் கொஞ்சும் இயற்கையும், தேயிலையின் மனமும்தான் நம்மில் பலருக்கு நினைவுக்கு வரும். அங்குள்ள தேயிலை தோட்டமும், தொழிலாளர் வர்க்க மக்களின் நிலை குறித்தும் பலருக்கு இத்தனை நாள்கள் தெரியாது. தற்போது அவர்கள் குறித்து பேச காரணமாக உள்ள அறிவிப்பு என்னவென்றால், மாஞ்சோலையில் உள்ள தேயிலை தோட்டத்தை நிர்வகித்து வந்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் நிறைவடைந்ததால், தொழிலாளி மக்கள் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியேற வேண்டும் என்ற அறிவிப்புதான். திடீரென வெளியேற சொன்னால் தேயிலை தோட்டத்தை மட்டுமே நம்பியிருந்த அப்பாவி மக்கள் எங்கு செல்வார்கள்.

தொழிலாள குடும்பத்தினருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றும், வழங்கப்படாதவர்களுக்கு அளிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதனையே நீதிமன்றமும் வலியுறுத்தியிருந்தது.

மாஞ்சோலை மக்கள்
“கள்ளச்சாராய விற்பனையின் பிண்ணனியில் மாஃபியா கும்பல் இருக்கின்றது; அரசு இதை செய்யணும்” - திருமாவளவன்

பட்டா கொடுத்ததோட சரி.. இடத்த காட்டல

இச்சூழலில், மாஞ்சோலையில் உள்ள 60 குடும்பங்களுக்கு தெற்கு பாப்பான்குளம் கிராமத்தில் 2019 ஆண்டு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சர்வே எண் உள்ளிட்ட விவரங்கள் சாதாரண பாமர மக்களான தொழிலாளர்களுக்கு புரியும் படியாக தெரிவிக்கப்படவில்லை. வீட்டு மனை பட்டாக்கள் குறித்து எந்த கேள்விக்கும் அரசு சார்பில் அதிகாரிகள் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இணையதளம் மூலம் சர்வே எண்ணை கண்டறிந்த ஊத்து கிராம வார்டு கவுன்சிலர் ஸ்டாலின், அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தபோது தனியார் தொண்டு நிறுவனம் ஆக்கிரமித்தது தெரியவந்தது.

ஊத்து கவுன்சிலர் ஸ்டாலின் இதுதொடர்பாக பேசுகையில், “பட்டா இரண்டு, மூன்று முறை கொடுத்துள்ளார்கள். எல்லோருக்கும் கொடுக்கவில்லை, சிலருக்கு வழங்கியுள்ளார்கள். பட்டா கொடுத்ததுடன் சரி. ஆனால், அந்த இடத்தைக் காட்டவில்லை. இடத்தைக் காட்டினால்தான் நாங்கள் போய் வீடு கட்ட முடியும். நாங்கள் அடிக்கடி போய் கேட்டபோது காட்டுகிறோம், காட்டுகிறோம் என சொன்னார்கள். ஆனால் மூன்று வருடம் கழித்து உங்களது பட்டா கேன்சல் ஆகிவிட்டது என்கிறார்கள். அதை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள்” என்றார்.

மாஞ்சோலை மக்கள்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்| பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான முதலமைச்சரின் அறிவிப்புகள்!

சட்டசபையில் கவன ஈர்ப்புத் தீர்மானம்

அரசின் இலவச பட்டா பெற்றவரான கண்ணன் இதுதொடர்பாக பேசுகையில், “இடத்தை இன்னும் காட்டவில்லை. சில ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்தார்கள். இதை யாரிடம் சொல்லி முறையிட வேண்டும் என தெரியவில்லை. அரசாங்கத்தின் உதவி இல்லாமல் யார் செய்வார்கள். பெயருக்கு எங்களுக்கு பட்டா கொடுத்துவிட்டு இடத்தை பெரிய பெரிய நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டார்கள்” என தெரிவித்தார்.

ஆக்கிரமிப்புகள் என்பது உண்மை என்று கண்டறியப்பட்டால், அவைகள் அகற்றப்பட்டு மக்கள் வாழ வழி செய்யப்படும் என்று அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார்.

இசக்கி சுப்பையா இதுதொடர்பாக கூறுகையில், “எங்களுக்கு நிரந்தரமான ஒரு வீடு, நிரந்தரமாக ஒரு வாழ்வாதாரம் வேண்டும் என நிர்வாகத்திடமும் கேட்கிறார்கள், அரசிடமும் கேட்கிறார்கள். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், நானோ அல்லது எங்கள் கட்சியின் பொதுச்செயலாளரோ உறுதியாக கவன ஈர்ப்புத் தீர்மானமாக கொண்டு வருவோம்” என தெரிவித்தார்.

மாஞ்சோலை மக்கள்
“விஷச் சாராயத்தைத் தடுக்கத்தவறிய அரசு” - கடும் கண்டனத்தை பதிவு செய்த நடிகர் சூர்யா

பட்டாக்கள் வழங்கியும், தற்போது வரை மக்கள் தவிப்பது ஏன் என புதிய தலைமுறை பல்வேறு கேள்விகளுடன், அம்பை தாசில்தாரை தொடர்பு கொண்ட போது எந்த கருத்தும் கூற முடியாது அழைப்பை துண்டித்தார்.

தேயிலை தோட்டமே வாழ்வு என இருந்த மக்களுக்கு போதிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த தவறிவிட்டு, அப்பாவி மக்களை குறைக்கூறுவது சரிவராது. புதிதாக மறுவாழ்வு கொடுப்பதற்காக நிலம் கொடுக்கப்பட்டாலும் வீடுகள் வழங்கப்படும் என உறுதி அளித்த போதும் மக்களின் மனநிலை மோசமாகதான் இருக்கிறது.

மாஞ்சோலை மக்கள்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் - சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com