ஆன்லைனின் விற்பனையாகும் மாஞ்சா நூல் - காவல்துறையினர் ஆதங்கம் 

ஆன்லைனின் விற்பனையாகும் மாஞ்சா நூல் - காவல்துறையினர் ஆதங்கம் 

ஆன்லைனின் விற்பனையாகும் மாஞ்சா நூல் - காவல்துறையினர் ஆதங்கம் 
Published on

மாஞ்சா விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மாஞ்சா நூல்கள் ஆன்லைனில் விற்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாஞ்சா விற்பனைக்கு கடந்த 2015-ஆம் ஆண்டே தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதனையும் மீறி ஆங்காங்கே மாஞ்சா கயிறுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. காவல்துறையினரின் கடுமையான நடவடிக்கைகளால் கடைகளில் மாஞ்சா விற்பனை செய்யப்படுவது பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆன்லைனில் மாஞ்சா விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. 10ஆம் நம்பர் என அழைக்கப்படும் நூல், மாஞ்சா நூலுக்கு இணையான ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த வகை நூல்கள் மிக எளிதில் ஆன்லைனில் கிடைப்பதாக ஆதங்கப்படுகின்றனர் காவல்துறையினர். 

12 பட்டங்கள் 250 ரூபாய் முதல் 599 ரூபாய் வரை ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. பட்டங்களுக்கு ஏற்ற மாஞ்சா நூல்களும் ஆன்லைனில் கிடைக்கின்றன.‌ ஆன்லைன் நிறுவனங்கள் எவ்வித கட்டுப்பாடுகளும், பொறுப்புணர்வும் இன்றி இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினர் குற்றஞ்சாட்டுகின்றனர். 

சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சைபர் கிரைம் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். முற்றுப்பெறாத மாஞ்சா நூல் மரணங்களுக்கு காவல்துறையி‌னர் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகள் மட்டுமே முற்றுப்புள்ளி வைக்கும் என்று கூறிவிட முடியாது. 

அதனால், இளைஞர்களான தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர்களும் மாஞ்சா நூல்களின் ஆபத்தை எடுத்துக் கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தி உயிர் பலிகளை தடுக்க உதவ வேண்டும் என்கிறார்கள் காவல்துறையினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com