தமிழ்நாடு
சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து குழந்தை உயிரிழப்பு: இரண்டு பேர் கைது
சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து குழந்தை உயிரிழப்பு: இரண்டு பேர் கைது
சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டம் விட்ட கொருக்குப்பேட்டை நாகராஜ் மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கொருக்குப்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது ஆண் குழந்தை நேற்று உயிரிழந்தான். மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பட்டம் விட்டதில் சென்னையில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.