சென்னைக்கு வருகை தந்த மணிப்பூர் விளையாட்டு வீரர்கள்! பின்னணி இதுதான்!

மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக, இன்று தமிழகம் வந்துள்ளனர்.

மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்டிருக்கும் மோதலால், அங்கு வன்முறை கடந்த மே மாதம் வெடித்தது. கடந்த மே மாதம் 3ஆம் தேதி வெடித்த இந்த வன்முறை இன்றும் சில இடங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தி மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்து வருகின்றன.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்file image

இந்த வன்முறைகளால் ஆசிய விளையாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் போன்ற தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளுக்கு மணிப்பூர் வீரர் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை அங்கு நிலவி வருகிறது. அதனால், தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சிகள் பெற மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில் இங்கு வந்து பயிற்சி பெற, மணிப்பூர் வீரர் மற்றும் வீராங்கனைகள் 15 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

மணிப்பூர் விளையாட்டு வீரர்கள்
”காங்கிரஸூம், நீதிமன்றத்தின் உத்தரவும்தான் காரணம்” மணிப்பூர் குறித்து மோடி பேசியது என்ன?-முழுவிபரம்

அவர்களுக்கு அனுமதி கிடைத்ததையடுத்து அந்த 15 பேரும் இன்று மணிப்பூரிலிருந்து தமிழகம் வந்தனர். இவர்களில் 10 வாள்வீச்சு வீரர்கள், 5 வீராங்கனைகள் மற்றும் 2 பயிற்சியாளர்கள் உள்ளனர். சென்னை வருகை தந்துள்ள அவ்வீரர்களுக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், அவர்கள் அனைவரும் சென்னையில் தங்கி பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் வந்துள்ள மணிப்பூர் வீரர் - வீராங்கனைகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com