மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Published on

மணிப்பூர் ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக ட்வீட் செய்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், “மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள தலைவர் கலைஞரின் அன்பைப் பெற்ற பண்பாளரும்; நீண்ட அரசியல் அனுபவத்துக்குச் சொந்தக்காரருமான அண்ணன் திரு. இல.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்!என தெரிவித்திருக்கிறார்.

இல.கணேசனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் கவிஞர் வைரமுத்து, “இலக்கிய கணேசனாக அறியப்பட்ட திரு இல.கணேசன் இன்று மணிப்பூர் ஆளுநராக அறியப்படுவது மகிழ்ச்சி தருகிறது. தமிழறிந்த ஒருவர் பெருமை பெறுவது பெருமிதம் தானே வாழ்த்துவோம்” என தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com