தமிழக காங்கிரசில் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்

தமிழக காங்கிரசில் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்
தமிழக காங்கிரசில் போரை கைவிடுங்கள் - மாணிக் தாகூர்

இந்தியாவின் மிக நீண்ட இயக்கமான காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்திலும் மிகப் பெரிய இடம் இருந்தது. திராவிட இயக்கங்களின் வருகைக்குப் பின் அந்தக் கட்சியால் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆனாலும் கூட்டணி வைத்து சில இடங்களில் வென்று, சட்டசபைக்கும் , நாடாளுமன்றத்துக்கும் உறுப்பினர்கள் செல்வார்கள். தமிழக காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு பெயர் உண்டு. அது தலைவர்களின் கட்சி. ஏனெனில் அத்தனை தலைவர்கள்.

இது ஒருபுறம் இருக்க, எப்போதும் கோஷ்டி மோதல் உள்ள கட்சி என்றால் அதுவும் காங்கிரஸ்தான் என்ற பெயரும் கூட உண்டு. பொறுப்புகள் கொடுப்பதில் தொடங்கி, தேர்தலில் வாய்ப்பு, அமைச்சர் பதவி வரை அனைத்திலும் கோஷ்டிகளாகவே தமிழக காங்கிரஸ் செயல்படும் என்ற பேச்சும் உண்டு. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவராக அதிமுக, பாஜகவில் இருந்து வந்தவரான திருநாவுக்கரசருக்கு கொடுக்கப்பட்டது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பிறகு அந்தப் பொறுப்பு அவரிடம் வந்தது. ஆனால் பொறுப்பேற்ற நாள் தொடங்கி இப்போது வரை திருநாவுக்கரசருக்கு எதிரியாக இருப்பவர் அவரது கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ்தான்.

கோஷ்டி மோதல் காரணமாக காங்கிரஸ் இழந்தது ஏராளம். பெற்றது என சொல்ல ஒன்றுமில்லை. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியில் முக்கியமானவரும் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவருமாக மாணிக் தாகூர் ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் திருநாவுக்கரசரும், இளங்கோவனும் தங்களுக்கு இடையேயான பேட்டிப் போரை கைவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்தப் போட்டி போர் கட்சிக்கும் எந்த வகையிலும் பலனளிக்காது என்னும் நிலையில் கட்சியை வலுப்படுத்த ராகுல் காந்தி உழைத்துக் கொண்டிருக்கும் போது இது தேவைதானா எனக் கேள்வி எழுப்பும் வகையிலும் உள்ளது. பேட்டிப் போர் கடைசியில் போட்டிப் போர் ஆகிவிடலாம் என்று எச்சரிக்கை தெரிகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com