காவலர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் நடவடிக்கை
புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் காவலர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து டிஜிபி சுந்தரி நந்தா பிறப்பித்துள்ள உத்தரவில், இருசக்கர வாகனம் பயன்படுத்தும் காவலர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு மற்றும் சொந்த இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் அனைத்து காவலர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் காவல்துறை உயரதிகாரிகள் இதனை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவலர்கள் ஹெல்மெட் அணிந்து செல்லும் புகைப்படம் புதுச்சேரி காவல்துறையின் வாட்ஸ்அப் குழுவில் பதிவிடப்பட வேண்டும் என்றும் இரண்டு முறைக்கு மேல் ஹெல்மெட் அணியாமல் செல்லும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.