காற்றாடி
காற்றாடிபுதியதலைமுறை

சென்னை | திடீரென கழுத்தில் சுற்றிய மாஞ்சா நூல்.. இரண்டரை வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!

மாஞ்சாநூல் கழுத்தில் சுற்றி இரண்டரை வயது குழந்தைக்கு நேர்ந்த விபரிதம். பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற குழந்தையின் கழுத்தை மாஞ்சாநூல் அறுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Published on

பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற குழந்தையின் கழுத்தை மாஞ்சாநூல் அறுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொடுங்கையூரைச் சேர்ந்த பாலமுருகன் நேற்று மாலை தனது மனைவி மற்றும் இரண்டரை வயது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வியாசர்பாடி மேம்பாலத்தில் பயணித்துள்ளார். அப்பொழுது பறந்து வந்த மாஞ்சாநூல் குழந்தையின் கழுத்தை அறுத்துள்ளது. படுகாயம் அடைந்த குழந்தைக்கு ஏழு தையல்கள் போடப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் காற்றாடி பறக்கவிட்ட இரு பள்ளி மாணவர்கள் அவற்றை விற்பனை செய்த குபேஷ்வரன் யுவராஜ் என நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யுவராஜ் வீட்டிலிருந்து 85 காற்றாடிகள் மாஞ்சாநூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com