மணப்பாறை: வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள சாரைப்பாம்பு - லாவகமாக பிடித்த தீயணைப்புத் துறை

மணப்பாறை: வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள சாரைப்பாம்பு - லாவகமாக பிடித்த தீயணைப்புத் துறை
மணப்பாறை: வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள சாரைப்பாம்பு - லாவகமாக பிடித்த தீயணைப்புத் துறை

மணப்பாறையில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள சாரைப்பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர் அதை வனப் பகுதியில் விட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பூங்கா ரோட்டில் வசித்து வருபவர் ஷேக் தாவூத் என்பவரின் மனைவி ஜஹீராபானு. இந்நிலையில், இன்று வீட்டின் கூரை பகுதியில் 6 அடி நீள பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

இந்த தகவலின் பேரில் ஷேக் தாவூத் வீட்டிற்குச் சென்ற நிலைய அலுவலர் சக்திவேல் மூர்த்தி தலைமையிலான தீயணைப்புத் துறை வீரர்கள், கூரை பகுதியில் இருந்த 6 அடி நீள சாரைப்பாம்பை பிடித்தனர். இதையடுத்து வனத் துறையினர் மூலம் அந்த பாம்பை அருகில் உள்ள பொய்கைப்பட்டி வனப் பகுதிக்குள் விட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com