\
குடும்ப பிரச்னை காரணமாக மாமாவை வெட்டிக்கொன்ற மச்சான்கள்

குடும்ப பிரச்னை காரணமாக மாமாவை வெட்டிக்கொன்ற மச்சான்கள்

குடும்ப பிரச்னை காரணமாக மாமாவை வெட்டிக்கொன்ற மச்சான்கள்
Published on

மானாமதுரையில் குடும்ப பிரச்னை காரணமாக அக்காளின் கணவரை தம்பிகளே குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மானாமதுரை ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மெக்கானிக் சுரேஷ்குமார். இவருக்கும் இவரது மனைவி கலைச்செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை வழக்கம்போல் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கலைச்செல்வியின் உடன்பிறந்த தம்பிகளான கணேசன், கார்த்திக் மற்றும் தாய்மாமன் ஆறுமுகம் ஆகிய மூவரும் சுரேஷ்குமாரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com