குடிபோதையில் தீக்குளிக்க முயன்ற இளைஞரை காப்பாற்றிய பத்திரிக்கையாளர்

குடிபோதையில் தீக்குளிக்க முயன்ற இளைஞரை காப்பாற்றிய பத்திரிக்கையாளர்

குடிபோதையில் தீக்குளிக்க முயன்ற இளைஞரை காப்பாற்றிய பத்திரிக்கையாளர்
Published on

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிபோதையில் தீக்குளிக்க முயன்ற இளைஞரை அருகிலிருந்த செய்தியாளர்கள் காப்பாற்றி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குடிபோதையில் வந்த இளைஞர் தீடீரென பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த செய்தியாளர்கள் அவரை மீட்டு, பெட்ரோலையும் தீப்பெட்டியையும் பிடுங்கிக்கொண்டு உடனடியாக ரேஸ் கோர்ஸ் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, தீக்குளிக்க முயன்றவர் கோவில்பாளையத்தில் வசித்து வரும் செல்வக்குமார் என்பதும், மீன் கடையில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது.

காந்திபுரத்தில் மதுபான கடையில் குடிக்க சென்ற போது தன்னுடைய 1,500 ரூபாய் பணத்தை சிலர் பிடுங்கி கொண்டதாகவும், இதுதொடர்பாக காந்திபுரம் காவல்நிலையத்திற்கு சென்றால் அங்குள்ள போலீசார் விரட்டுவதாகவும், மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றால் உள்ளே விடாமல் போலீசார் விரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் காவல்துறையினர் ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாத நிலையில், செய்தியாளர்கள் அந்த பகுதியில் இருந்ததால் குடிபோதையில் தீக்குளிக்க முயன்றவரை காப்பாற்றினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com