சாலையை கடக்க முயன்றபோது நடந்த சோகம் - கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

சாலையை கடக்க முயன்றபோது நடந்த சோகம் - கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

சாலையை கடக்க முயன்றபோது நடந்த சோகம் - கார் மோதி ஒருவர் உயிரிழப்பு
Published on

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அனிச்சம்பாளையம் பிரிவு அருகே கார் மோதி இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர் உயிரிழந்தது குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் - நாமக்கல் நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து அனிச்சம்பாளையம் பிரிவு சாலையை, அனிச்சம்பாளையத்தை சேர்ந்த நடராஜன் மகன் பிரபு (38) கடக்க முயன்றுள்ளார். அப்போது மதுரையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற கார் ஒன்று சாலையை கடக்க முயன்ற பிரபுவின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த பிரபுவை அவ்வழியாக சென்றவர்கள் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், பிரபு ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேலூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விபத்து குறித்து கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com