\
சென்னை: ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நபர்

சென்னை: ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நபர்

சென்னை: ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நபர்
Published on

சென்னை ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து அடையாளம் தெரியாத ஒருவர் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன், ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் குதித்தவர் யார் என்பது குறித்து மயிலாப்பூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில 45 வயதுடைய அந்த நபர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், அவர் ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த விஜய்கிருஷ்ணன் என்பதும் தெரியவந்தது. இவர் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைபெற்று வந்திருக்கிறார். ஆனால் சிகிச்சையை பாதியில் நிறுத்தி உள்ளார். இந்நிலையில் ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தின் மீது இரு சக்கர வாகனத்தில் வந்து நடுவில் வண்டியை நிறுத்திவிட்டு திடீரென மேலிருந்து கீழே குதித்துள்ளார்.

அப்போது பாலத்தின் கீழ் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மணிகண்டன், கீழே விழுந்தவரை உடனடியாக மீட்டு 3 மணியளவில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளார். இரண்டு கால்களும் முறிந்த நிலையில், முதுகுத்தண்டுவடத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com