மகளின் செல்போன் எண்ணைக் கேட்டு கத்தியால் மிரட்டப்பட்ட முதியவர்

மகளின் செல்போன் எண்ணைக் கேட்டு கத்தியால் மிரட்டப்பட்ட முதியவர்

மகளின் செல்போன் எண்ணைக் கேட்டு கத்தியால் மிரட்டப்பட்ட முதியவர்
Published on

சென்னையை அடுத்த பூந்தமல்லியில், ம‌களின் செல்போன் எண்ணை கேட்டு தந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி சேஷா நகரைச் சேர்ந்த ஸ்டாலின் என்ற முதியவர் தேவாலயத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த பார்த்திபன் என்ற இளைஞர், கத்திமுனையில் முதியவரைப் பிடித்து வைத்துக்கொண்டு அவரது மகளின் செல்போன் எண்ணை கேட்டு அடம்பிடித்துள்ளார். அவர் கொடுக்க மறுக்கவே, கத்தியால் முதியவரின் கையை கிழித்தும் கழுத்தில் கத்தியை வைத்தும் அவர் மிரட்டினார்.
முதியவரை காப்பாற்ற முயன்றவர்களையும் அந்த நபர் கத்தியைக் காட்டி மிரட்டினார். அரைமணிநேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சம்பவத்தை அடுத்து பொதுமக்கள், அந்த நபரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பார்த்திபன் என்ற அந்த நபர், முதியவரின் மகளிடம் ட்யூஷன் படித்தவர் என்பதும், அண்மைக்காலமாக மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்த பார்த்திபன், சிகிச்சைக்குப்பிறகு வீடு திரும்பியபோது ‌இந்த மிரட்டலை அரங்கேற்றியுள்ளார். ஆசிரியையின் தந்தை அளித்த புகாரின் பேரில், பார்த்திபன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com