ஓடும் பேருந்தில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த கும்பல்

ஓடும் பேருந்தில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த கும்பல்
ஓடும் பேருந்தில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த கும்பல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே காரில் வந்த மர்மகும்பல் இளைஞர் ஒருவரை ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். வாடகை வீட்டில் வசித்து வந்த சதீஷ்குமார், செய்யாறு அருகே உள்ள வேல்சோமசுந்தரம் பகுதியில் வசிக்கும் தாய், தந்தையை சந்திப்பதற்காக சென்றார். 

செய்யாறு பேருந்து நிலையத்தில் வந்திறங்கிய அவர், அங்குள்ள கடை ஒன்றில் டீ குடிக்கச் சென்றுள்ளார். அப்போது, காரில் வந்த 10பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சதீஷ்குமாரை தாக்கினர். ரத்த காயங்களுடன் தப்பியோடிய அவர், தனியார் பேருந்து ஒன்றில் ஏறினார். விடாது பின் தொடர்ந்து வந்த அந்த கும்பல் பேருந்தில் வைத்தே அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் அங்கும் இங்கும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். 

பொதுமக்கள் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com