கள்ளக்குறிச்சி: நாட்டு துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொலை

கள்ளக்குறிச்சி: நாட்டு துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொலை

கள்ளக்குறிச்சி: நாட்டு துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொலை
Published on

கள்ளக்குறிச்சி அருகே நாட்டுத் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சிறுபனைத் தக்கா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஜான். இவரது பக்கத்து வீட்டில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். ஆறுமுகத்தின் அப்பா வேட்டையாடுவதற்காக லைசென்ஸ் வாங்கி நாட்டுத் துப்பாக்கி ஒன்று வைத்துள்ளார். 

இந்நிலையில் ஆறுமுகம் தனது அப்பாவின் நாட்டுத் துப்பாக்கியால் ஜானை சுட்டுக் கொலை செய்துள்ளார். ஆறுமுகம் மனநலம் சரியில்லாதவர் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com