சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை
Published on

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

உதயகுமார் என்பவர் ‌தூங்கிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அந்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், இளைஞர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக 4 லட்சம் ரூபாய் நிவா‌ரணம் வழங்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com