Actor Sivaji fanpt desk
தமிழ்நாடு
மதுரை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் - சிலையின் முன்பு ரசிகர் செய்த செயலால் பரபரப்பு
மதுரையில் சிவாஜி சிலைக்கு வெகுநேரமாக கற்பூரத்தால் ஆரத்தி எடுத்து பதற்றத்தை ஏற்படுத்திய ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்: மணிகண்டபிரபு
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 23வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று அவரது நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் நீதிமன்றம் அருகில் உள்ள சிவாஜியின் திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சிவாஜி கணேசன் ரசிகர்கள் மரியாதை செலுத்தினர்.
Actor Sivaji fanpt desk
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜி நாகராஜ் என்ற ரசிகர், சிவாஜி சிலை முன்பு நெடுநேரமாக பற்றி எரியும் வகையில் கற்பூரத்தை ஏற்றி கொளுந்துவிட்டு எரிந்த தீயுடன் ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கற்பூரங்களை கொளுத்தி சிலையின் பீடத்தில் ஏறி கொளுந்துவிட்டு எரிந்த ஆரத்தியை காட்டி பதற்றத்தை ஏற்படுத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.