முதல்வர் வழங்கிய நலத்திட்ட ஆணையை மேடையிலேயே திருப்பிக் கொடுத்தது ஏன்? மயிலாடுதுறை பயனாளி விளக்கம்!

மயிலாடுதுறையில், முதலமைச்சர் வழங்கிய நலத்திட்ட நிவாரண ஆணையை பயனாளி திருப்பி அளித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அந்த பயனாளி விளக்கம் அளித்துள்ளார்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வில் முதலமைச்சர் வழங்கிய நலத்திட்ட நிவாரண ஆணையை, பயனாளி ஒருவர் மேடையிலேயே திருப்பிக் கொடுத்துவிட்டுச் சென்றார். அப்போது முதலமைச்சர் வாங்க மறுத்ததால் பயனாளியான மீனவர் ரமேஷ், அமைச்சர்கள் கைகளில் நலத்திட்ட நிவாரண ஆணையை கொடுத்துவிட்டுச் சென்றார்.

முதல்வர் வழங்கிய நலத்திட்ட ஆணையை மேடையிலேயே திருப்பிக் கொடுத்த பயனாளி
முதல்வர் வழங்கிய நலத்திட்ட ஆணையை மேடையிலேயே திருப்பிக் கொடுத்த பயனாளி
முதல்வர் வழங்கிய நலத்திட்ட ஆணையை மேடையிலேயே திருப்பிக் கொடுத்த பயனாளி
’நான் 16 வயதில் வீட்டைவிட்டு வெளியேறியது இதற்குத்தான்..’ - சென்னை கூட்டத்தில் மோடி பேச்சு!

இந்நிலையில், நலத்திட்ட உதவியை திருப்பிக் கொடுத்தது குறித்து ரமேஷிடம், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது “எனக்கு வழங்கிய நிவாரண ஆணையில் பெயர் மாற்றம் இருந்தது அதனால்தான் திரும்ப அமைச்சர்களிடம் கொடுத்தேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com