\
காதல் திருமணம் செய்ய உதவிய இளைஞர் வெட்டிக் கொலை

காதல் திருமணம் செய்ய உதவிய இளைஞர் வெட்டிக் கொலை

காதல் திருமணம் செய்ய உதவிய இளைஞர் வெட்டிக் கொலை
Published on

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மேலேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவர், முதலாமாண்டு சட்டம் படித்து வருகிறார். இவர், அவரது நண்பரான கார்த்திக் காதல் திருமணம் செய்வதற்கு உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் கார்த்தியின் தம்பி மற்றும் நண்பர்களுடன் சூர்யா மது அருந்திக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது கார்த்திக் காதல் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் சகோதரர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல், சூர்யாவை கொலை செய்து முட்புதரில் வீசிச் சென்றதாக கூறப்படுகிறது. அத்துடன் சூர்யாவின் மர்ம உறுப்பை அறுத்தும் துண்டாக்கியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கார்த்தியின் தம்பியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட சூர்யாவிற்கு திருமணமாகி ஓராண்டே ஆகிறது என்பதும் மனைவி காயத்ரி கர்ப்பிணிப் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com