திருப்பூரில் பட்டப்பகலில் கிளி ஜோசியர் வெட்டிக்கொலை

திருப்பூரில் பட்டப்பகலில் கிளி ஜோசியர் வெட்டிக்கொலை

திருப்பூரில் பட்டப்பகலில் கிளி ஜோசியர் வெட்டிக்கொலை
Published on

திருப்பூரில் பட்டப்பகலில் ஜோசியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் குமரன் சாலை எப்போதும் ஆள்நடமாட்டம் காணப்படும் பரபரப்பான பகுதிதான். இப்பகுதியில் கிளி ஜோசியரான ரமேஷ் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஜோசியர் ரமேஷை சரமாரியாக வெட்டுகிறார். இதில் நிலைதடுமாறி கீழே விழும் ஜோசியர் பரிதாபமாக உயிரிழக்கிறார். பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன.

இதனிடையே ஜோசியர் ரமேஷ், வசியம் செய்து பெண்களை ஏமாற்றியதாக கொலை செய்த நபர் துண்டு பிரசுரத்தை அப்பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார் . கையில் அரிவாள் வைத்திருந்ததால் கொலையாளியை பிடிக்க பொதுமக்கள் அச்சம் காட்டியுள்ளனர். ஹெல்மெட் அணிந்துக்கொண்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com