\
'சந்தேகத்தால் ஏற்பட்ட விபரீதம்' - மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கணவன்

'சந்தேகத்தால் ஏற்பட்ட விபரீதம்' - மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கணவன்

'சந்தேகத்தால் ஏற்பட்ட விபரீதம்' - மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கணவன்
Published on

சென்னை பள்ளிக்கரணையில் மனைவியின் தலையில் கணவர் கல்லைப்போட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள துலிக்கை அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வேல்முருகன் (37). இவர் கடலைமிட்டாய் விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே ஈஸ்வரிக்கும், கால்டாக்சி ஓட்டுனருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர் அடிக்கடி ஈஸ்வரியின் வீட்டிற்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக வேல்முருகனுக்கும், ஈஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

டாக்சி ஓட்டுனரின் உறவை உடனடியாக முறித்துகொள்ளும்படி, வேல்முருகன் அறிவுறுத்தியும் ஈஸ்வரி அதனை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த வேல்முருகன் அருகில் இருந்த கல்லை எடுத்து ஈஸ்வரியின் தலையில் போட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த ஈஸ்வரி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து வேல்முருகன் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com