தமிழ்நாடு
கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
புதுக்கோட்டையில் காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் காயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை அருகே திருமயத்தைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர், தாய் -தந்தையுடன் வேளாங்கண்ணிக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தார். அறந்தாங்கி அருகே அவர்களது கார் சென்றபோது, மணமேல்குடியைச் சேர்ந்த நடேசன் என்பவர், இருசக்கர வாகனத்தில் எதிரே வந்துள்ளார். அப்போது, காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில், கார் நிலைத்தடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஸ்டாலினும், அவரது தாயும் காயங்களுடன் உயிர் தப்பினர். ஸ்டாலினின் தந்தை பாக்கியராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த நடேசன், கை, கால்கள் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.