\
பெரம்பலூர் தனியார் விடுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூர் தனியார் விடுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூர் தனியார் விடுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
Published on

பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதியில், புதுவையைச் சேர்ந்த ஒருவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில், பார்த்தசாரதி என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு, வாடகைக்கு அறை எடுத்துள்ளார். அவர் இரண்டு நாட்களாக அறையிலிருந்து வெளியே வராததால், சந்தேகமடைந்த விடுதி உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் அளித்தார். 

இதனையடுத்து காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பார்த்தசாரதி, மின்விசிறியில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. விசாரணையில் பார்த்தசாரதி புதுவையைச் சேர்ந்த கார் புரோக்கர் என்பது தெரியவந்தது. உடலைக் கைப்பற்றி பெரம்பலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com