''நீங்கள் கண்டிப்பாக போக வேண்டிய ஒரு இடம்'' - காவல்நிலையத்துக்கு ‘ரிவீவ்’ கொடுத்த இளைஞர்!
சென்னை திருமுல்லைவாயில் காவல் நிலையத்துக்கு திரைப்படங்களுக்கு மதிப்பெண் கொடுப்பது போல், 4 ஸ்டார் கொடுத்து இளைஞர் ஒருவர் செய்த ரிவீவ் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கூகுள் மேப்பில் காட்டப்படும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், சுற்றுலா பயணிகள் என அனைத்துக்கும் மக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம். அந்த இடத்தின் தரத்தை ஸ்டார் முறையில் குறிப்பிட்டு தரம் பிரிக்கலாம். அதிகபட்சமாக 5 ஸ்டார் இருக்கும் நிலையில் 4 ஸ்டாருக்கு மேல் பெற்றிருந்தால் அந்த இடம் தரமானவை என்பதாகும்.
மக்கள் கொடுக்கும் இந்த ரிவீவை பொருத்து பலரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகளை தேர்ந்தெடுப்பர். இந்நிலையில் இளைஞர் ஒருவர் காவல் நிலையத்துக்கு 4 ஸ்டார் கொடுத்து பாசிட்டிவாக ரிவீவ் செய்துள்ளார். அது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
திருமணம் செய்வதாகக் கூறி, ரவுடியை மடக்கிய பெண் சப் இன்ஸ்பெக்டர்: http://bit.ly/2Y2Lkne
அந்த இளைஞர் சென்னை திருமுல்லைவாயில் T10 காவல் நிலையத்தை ரிவீவ் செய்துள்ளார். மேலும் கருத்துகளை பகிர்ந்துள்ள அவர், நடு இரவில் சரியான ஆவணங்கள் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் சென்றேன். அதனால் என்னை திருமுல்லைவாயில் T10 காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அந்த காவல்நிலையம் முக்கியசாலை ஓரமாகவே உள்ளது. சுத்தமாக இருந்தது. அங்கிருந்த அதிகாரிகள் பணிவுடன் நடந்து கொண்டனர். நான் எந்த தொல்லையையும் அனுபவிக்கவில்லை. லஞ்சம் ஏதும் கொடுக்காமலே நான் விடுவிக்கப்பட்டேன். நீங்கள் கண்டிப்பாக போக வேண்டிய ஒரு இடம் என தெரிவித்துள்ளார். இந்த கருத்து தற்பொது வைரலாகி வருகிறது.
நாயை புலியாக மாற்றிய விவசாயி: http://bit.ly/2OxpR2M