நடுரோட்டில் தீக்குளித்த ஓட்டுநர் மணிகண்டன் மரணம்

நடுரோட்டில் தீக்குளித்த ஓட்டுநர் மணிகண்டன் மரணம்

நடுரோட்டில் தீக்குளித்த ஓட்டுநர் மணிகண்டன் மரணம்
Published on

சென்னையில் காவல்துறையினர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி, பொதுமக்கள் மத்தியில் நடுரோட்டில் தீக்குளித்த ஓட்டுநர் மணிகண்டன் மரணம் அடைந்தார்.

நெல்லை சங்கரன்கோவிலைச் சேர்ந்த மணிகண்டன் என்‌பவர் தாம்பரத்தில் தங்கி கால்டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வந்திருக்கிறார். இவர் கடந்த 24ம் தேதி ஓ.எம்.ஆர். சாலையிலிருந்து திருவான்மியூர் நோக்கி தனது கால் டாக்சியில் சென்றபோது, சீட் பெல்ட் அணியாததைக் கண்ட போக்குவரத்து காவல்துறையினர் அவரை அடித்ததோடு தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

அதனால், தனது செல்போ‌ன் மூலம் வாக்குமூலம் அளித்துவிட்டு மணிகண்டன் நடுரோட்டில் தீக்குளித்தார். அதையடுத்து, காவல்துறையினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மணிகண்டன் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தாமரைச்செல்வன் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com