மதுரையில் போலீசார் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு? : பொதுமக்கள் போராட்டம்

மதுரையில் போலீசார் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு? : பொதுமக்கள் போராட்டம்

மதுரையில் போலீசார் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு? : பொதுமக்கள் போராட்டம்

மதுரை கருப்பாயூரணியில் காவல்துறையினர் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தவர் ராவுத்தர். இவர் நேற்று  கறிக்கடை நடத்தியதாகவும் அதனால் அப்பகுதிக்கு வந்த மூன்று காவலர்கள் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராவுத்தர் இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். போலீசார் தாக்கியதே அவர் உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி அவரது உறவினர்கள் மற்றும் கருப்பாயூரணி பொதுமக்கள் அவரது உடலை சாலையின் குறுக்கே போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

144 தடை உத்தரவு உள்ள நிலையில் காவல்துறை தாக்கியதால் ராவுத்தர் உயிரிழந்ததாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்த சடலத்தை அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்ல சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com