\
விளம்பரப் பலகை வைக்க முயன்றபோது விபத்து: மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

விளம்பரப் பலகை வைக்க முயன்றபோது விபத்து: மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

விளம்பரப் பலகை வைக்க முயன்றபோது விபத்து: மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
Published on

காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவன விளம்பர பலகை அமைத்தபோது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் வழக்கறுத்தீஸ்வரர் கோயில் எதிரே உள்ள கட்டடத்தின் மாடியில் தனியார் நிறுவனம் சார்பில் விளம்பர பலகை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. அப்போது கீழ்ப்பகுதியிலிருந்து மேல் மாடிக்கு விளம்பர பேனல்களை ஏற்றியபோது அந்தவழியே செல்லும் உயரழுத்த மின்சார கம்பி மீது பேனர் பட்டதில் இளங்கோ என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இவருக்கு உதவி செய்ய வந்த செந்தில்குமார் என்பவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து நகராட்சி ஆணையர் மகேஸ்வரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, விளம்பர பலகை வைக்க அனுமதி பெறவில்லை என்றும், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவரும், அதே பதிலை கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com