ஆத்தூர்| குப்பை கொட்டுவதில் பக்கத்து வீட்டுக்காரரிடம் பிரச்னை.. லாரியை வைத்து காரை இடித்த நபர்!
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் மனைவி அனிதா (36). இவருக்கும் இவரது வீட்டின் அருகில் இருக்கும் பூபதி என்பவருக்கும் குப்பை கொட்டுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பூபதிக்கு ஆதரவாக அவரது உறவினர் லாரியை வேகமாக சண்டையிட்ட அனிதா தரப்பு மீது மோதுவது போல் லாரியை இயக்கி உள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் லாரி வேகமாக வருவதை அறிந்து அங்கிருந்து தப்பி ஓடினர். வேகமாக வந்த லாரி அனிதா வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது இடித்து சேதப்படுத்தியது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட சாதாரண பிரச்சனைக்கு கூட லாரியை கொண்டு மோதுவது போல் அச்சுறுத்தும் வகையில் இயக்கிய லாரி மீதும், லாரி ஓட்டுநர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இது குறித்து ஆத்தூர் ஆத்தூர் ஊரக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.