\
பரோட்டா சாப்பிட்டுவிட்டு அரிவாளை காட்டி மிரட்டிய வழக்கறிஞர்..!

பரோட்டா சாப்பிட்டுவிட்டு அரிவாளை காட்டி மிரட்டிய வழக்கறிஞர்..!

பரோட்டா சாப்பிட்டுவிட்டு அரிவாளை காட்டி மிரட்டிய வழக்கறிஞர்..!
Published on: 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஓட்டல் ஒன்றில் சாப்பிட்ட பரோட்டாவுக்கு பணம் தர மறுத்து ஊழியர்களை அரிவாள் முனையில் வழக்கறிஞர் ஒருவர் மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருங்கூரில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவர் சாப்பிடச் சென்றுள்ளார். பரோட்டா சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் ஊழியர்களை மிரட்டியதுடன் அரிவாளால், வெட்டவும் முயன்றதாக தெரிகிறது. மேலும் ஓட்டலில் இருந்த பொருட்களையும் அரிவாளால் சேதப்படுத்தியுள்ளார். இதனை கண்ட வாடிக்கையாளர்கள் ஓட்டலை விட்டு அலறியடித்து ஓடியுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்ததில், அரிவாளால் ஊழியர்களை வெட்ட முயன்றவர் அதே பகுதியைச் சேர்ந்த சுதா அமர்சிங் என்பதும் அவர் வழக்கறிஞராக பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து வழக்கறிஞர் சுதா அமர்சிங் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com