\
மகளுக்கு பாலியல் தொல்லை - இரண்டாவது கணவர் மீது பாய்ந்த போக்சோ

மகளுக்கு பாலியல் தொல்லை - இரண்டாவது கணவர் மீது பாய்ந்த போக்சோ

மகளுக்கு பாலியல் தொல்லை - இரண்டாவது கணவர் மீது பாய்ந்த போக்சோ
Published on

சென்னையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டாவது கணவரை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வானகரத்தைச் சேர்ந்த பெண்ணின் கணவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 2013ம் மாண்டு உயிரிழந்தார். அவரது மறைவையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு கற்பக கனி என்பவரை அந்த பெண் திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்ய வேண்டுமென்றால் கார் ஒன்றை வரதட்சணையாக தர வேண்டும் என கற்பக கனி கேட்டுள்ளார். அவரை நம்பி ஒரு காரை கற்பககனிக்கு வரதட்சணையாக கொடுத்து தனது இரு குழந்தைகளுடன் அந்த பெண் குடும்பம் நடத்தி வந்துள்ளார். திருமணத்திற்கு பின் தனது இரண்டாவது கணவர் நடவடிக்கை சரியில்லாமல் இருந்தாகவும், பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கற்பக கனி வீட்டிற்கு வராமால் வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தாக தெரியவந்த நிலையில் , கற்பக கனி தனது 13 வயது பெண் குழந்தைக்கும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததையறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், கற்பகனி மீது திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.

கற்பக கனி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தும் கைது செய்யாமல் இருந்து வந்துள்ளனர். இதனை அடுத்து இரண்டாவது கணவர் மீது நடவடிக்கை எடுக்காததை அடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தாய் புகார் அளித்தார்.

தொடர்ந்து தன் 13 வயது மக்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கற்பககனி மீது நடவடிக்கை எடுக்காததால்,குழந்தை நலகுழு எண்ணிற்கு பாதிக்கப்பட்ட சிறுமி புகாரளித்துள்ளார். அந்த சிறுமி குழந்தை நல குழு அதிகாரிகளிடம் பேசிய ஆடியோவும் வெளியாகி வைரலானது. இதனையடுத்து திருமங்கல அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தாம்பரத்தில் பதுங்கி இருந்த கற்பககனியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com