திருக்கோவிலூரில் பெரியார் சிலையை அவமதித்த ஒருவர் கைது

திருக்கோவிலூரில் பெரியார் சிலையை அவமதித்த ஒருவர் கைது

திருக்கோவிலூரில் பெரியார் சிலையை அவமதித்த ஒருவர் கைது
Published on

திருக்கோவிலூரில் பெரியார் சிலையை அவமதிப்புச் செய்ததாகக் கூறி, இந்து முன்னணிக் கட்சியைச் சேர்ந்த மணி என்பவர் கைது செய்யப்பட்டார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூர் பகுதியில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர் பெரியார் சிலையை அவமதிப்பு செய்தனர். இதனை கண்டித்தும், பெரியார் சிலையை அவமதிப்பு செய்த சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய கோரியும் திமுக, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து காவல்துறையினர் சமூக விரோதிகளை கைது செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தார்.  இந்நிலையில் திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள பெரியார் சிலையை அவமதிப்பு செய்ததாக இந்து முன்னணிக் கட்சியை சேர்ந்த மணி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com