தமிழ்நாடு
உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்த நபர் கைது
உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்த நபர் கைது
பங்களாதேஷில் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவில் நுழைந்ததாக உஜ்ஜல் குமார் தத்தா என்ற நபரை ஈரோடு ரயில் நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
டாக்காவை சேர்ந்தவர் உஜ்ஜல் குமார் தத்தாவின் உறவினர்கள் கொல்கத்தாவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட எவ்வித ஆவணங்களும் இன்றி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவுக்குள் நுழைந்ததாக இந்திய தூதரகத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உஜ்ஜல்குமார் குறித்து இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்நிலையங்கள் மற்றும் விமானநிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் குர்லா விரைவு ரயிலில் உஜ்ஜல்குமார் பயணம் செய்வதாக தகவல் கிடைத்ததன் பேரில், ஈரோடு ரயில்நிலையம் வந்த அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.