சென்னை அடையாரில் கொசு விரட்டி செடியை வளர்ந்தவர் கஞ்சா செடி வளர்த்ததாக காவல்துறையினர் விசாரித்த சம்பவம் நடைப்பெற்றுள்ளது.
சென்னை அடையார் பகுதியில் ஸ்ரீராம் (62) என்பவருக்கு சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு எட்வர்டு (25) என்ற இளைஞர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். எட்வர்டு தனது வீட்டில் வித்தியாசமான ஒரு செடியை வளர்த்து வந்துள்ளார். அது பார்ப்பதற்கு கஞ்சா செடி போல் இருந்ததால் ஸ்ரீராம் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்திரி நகர் காவல்துறையினர் அந்த செடியுடன் இளைஞரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.அந்த செடியை ஆய்வு செய்ததில் அது கஞ்சா செடி இல்லை என்பது உறுதியானது.
விசாரணையில் அது கஞ்சா செடி இல்லை என்றும் கொசு விரட்டி செடி என தெரியவந்துள்ளது. எட்வர்டு இணையதளத்தில் ஆர்டர் செய்து கொசு விரட்டி செடியை வாங்கி வளர்த்து வந்துள்ளார். பின்னர் இதுகுறித்து எட்வர்டிடம் காவல்துறையினர் எழுதிவாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். காவல் துறையின் பொறுப்புக்கு ஒரு அளவே இல்லையா, என எட்வர்டு நொந்துக்கொண்டிருப்பார்.