வடலூரில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த நபர் கைது
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே அரசுப் பேருந்து ஒன்றை நிறுத்தி ஓட்டுநருடன் ஒருவர் தகராறு செய்ததுடன், ஓட்டுநர் பேசிக்கொண்டிருந்தபோதே முன் பக்கமாக சென்று பேருந்தின் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த நபர் வடலூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில், அவர் வடலூர் பாமக துணை அமைப்பாளர் மதியழகன் என தெரியவந்துள்ளது. அவர் பேருந்தை நிறுத்தி ஒட்டுநரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டதுடன், பேருந்தின் முன்பக்கமாக சென்று கண்ணாடி முன்புநின்று ஓட்டுநரிடம் ஏதோ பேசியதுடன், திடீரென பேருந்து கண்ணாடி மீது கல்வீசினார். அதில், பேருந்து கண்ணாடி சத்தத்துடன் நொறுங்கி விழுந்தது. உடனே அவரும் சாலையில் விழுந்தார். இதனை பேருந்தில் இருந்த நபர் ஒருவர் செல்போனில் காட்சிகளாக பதிவு செய்துள்ளார்.
இந்த காட்சிகள் தற்போது வடிவேல் காமெடியை மையப்படுத்தி ’’பாடி ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்’’ என பரவிவருகிறது. பேருந்து கண்ணாடி மீது கல்வீசிய நபரை தற்போது வடலூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.